பொதுத்தேர்வு பணி - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  அனிதா   | Last Modified : 29 Oct, 2019 04:39 pm
public-exams-school-education-department-order

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு பணிக்கான விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், 2020 மார்ச் மாதம் நடைபெறவுள்ள 5,8,10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பணி விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரித்தல் விவரங்களை சேகரிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,  விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட பணிகளுக்கான விவரங்களையும், பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்கள் வரும் 31ஆம் தேதிக்குள் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close