இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க சட்டம்

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2019 05:50 pm
act-to-increase-first-time-farmers-income-in-india

விவசாயிகளின் வருமானம் பெருக தமிழக அரசு இயற்றிய வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம், சேவைகள் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
விவசாய உற்பத்தியை பெருக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும், அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி போன்ற விவசாயிகள் சந்திக்கும் பாதிப்பை தடுக்கவும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஒப்பந்த பண்ணையச் சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர விதிகளை வகுத்து செயலாக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close