சபரிமலை தரிசனம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது.
அதன்படி, கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகம் வழியே விசாகப்பட்டினத்திற்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை செவ்வாய் தோறும் காலை 10 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நவம்பர் 1 ஆம் தேதி காலை 7 மணிக்கு மங்களூரு சந்திப்பு - பாவ்நகர் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
newstm.in