குற்றாலம், சுருளி, திற்பரப்பு அருவிகளில் குளிக்கத்தடை!

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 09:02 am
ban-in-bathing-courtallam-suruli

கன மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் குற்றாலம், சுருளி, திற்பரப்பு அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்புக்கருதி, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close