தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 09:58 am
chief-minister-s-honor-in-thevar-memorial

முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர் முத்துராமலிங்கத் தேவர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிறந்தார். இவரது பிறந்த நாளான அக்டோபர் 30 தேதியை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடிவருகிறது.  

அதன்படி, முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி, 57வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close