காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 10:25 am
the-wind-became-the-inferior-zone

குமரி கடல்பகுதியையொட்டி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

குமரி கடல்பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் என்றும், வடகிழக்கை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரில் 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் 55 - 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குமரி கடற்பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close