மருத்துவர்கள் போராட்டம் 6வது நாளாக  நீடிப்பு

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 10:48 am
doctors-struggle-extends-to-6th-day

தமிழக அரசு மருத்துவர்கள் 6வது நாளாக தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊதிய உயர்வு மற்றும் அதிகப்படியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 6வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

இதுகுறித்து சங்க கூட்டமைப்பினர் கூறுகையில், "17,000 பேர் கொண்ட எங்கள் சங்கத்தின் போராட்டம் இதுவரை வாபஸ் பெறப்படவில்லை என்றும்  90 சதவீதம் பேர் போராட்டத்தில் தான் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த அறிக்கை அதிர்ச்சியளிப்பதாகவும், முதலமைச்சர் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close