காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 12:53 pm
opportunity-to-storm

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது; குமரிக்கடலில் தற்போது உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிறகு புயலாக மாறவும் வாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் நாளை வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close