நாளை பணிக்கு வராவிட்டால்...மருத்துவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை 

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2019 08:32 pm
minister-warned-doctors-not-to-work-tomorrow

பணிக்கு வராத மருத்துவர்கள் எண்ணிக்கை கணக்கிட்டு காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைச்சர் அளித்த பேட்டியில், ‘அரசு மருத்துவர்கள் தங்கம் போராட்டத்தை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பணிக்கு வரும் மருத்துவர்களை தடுப்பது என்பது ஏற்புடையதல்ல. எவ்வித முன்னறிவிப்பின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எந்த கோரிக்கையும் தெரிவிப்பதற்கு ஒரு அணுகுமுறை உள்ளது. மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராத மருத்துவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும். பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளானால் காலி பணியிடமாக கருதப்பட்டு மாற்று மருத்துவர் நியமனம் செய்யப்படுவார்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு மருத்துவர்களின் பணி மூப்பு சலுகை ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close