அரசு வேடிக்கை பார்க்காது: வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

  அனிதா   | Last Modified : 31 Oct, 2019 11:27 am
cm-palanisamy-speech-about-doctors-strike

தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, " நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் பணி வர மறுக்கும் மருத்துவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காது. மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அமைச்சர் அறிவித்தப்படி பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும். நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள சொல்வதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுகிறது என தெரிவித்தார். 

குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கமுடியாதது வேதனைக்குரியது. குழந்தையை நலமுடன் மீட்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுர்ஜித் விவகாரத்தில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் மீது பழி போடப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது கூட தெரியவில்லை என குறிப்பிட்டார். மேலும், வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு சாதகமான சட்டம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close