மருத்துவர்களுக்கு நாளை காலை வரை அவகாசம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 06:10 pm
doctors-need-time-till-tomorrow-minister-vijayabaskar

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீதமுள்ள மருத்துவர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனை உகந்த இடமில்லை. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பிவிட்டனர். பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close