பிரேக் இன் சர்வீஸ் திரும்பப் பெறப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 11:14 am
break-in-service-revoked-minister-vijayabaskar

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பிரேன் இன் (பணிமுறிவு) திரும்பப் பெறப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்த போராட்டத்தை அரசு மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அமைச்சர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றதையொட்டி, பணி முறிவு நடவடிக்கையை அரசு கைவிடுகிறது. முதலமைச்சர் உத்தரவிட்டபடி அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலிக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக இன்று வாபஸ் பெறப்பட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close