மேட்டூர் அணை நிலவரம்

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 08:52 am
mettur-dam-water-level

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 9,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 5400 கன அடியில் இருந்த 8,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்சியாகவும் உள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close