புதுச்சேரியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிலத்தடி நீர் அதிகார அமைப்பு அறிவித்துள்ளது.
சுர்ஜித் உயிரிழப்பை தொடர்ந்து, ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் விபரீதங்களை தடுக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இதேபோல் புதுச்சேரியில், பயன்படாத ஆழ்துளை கிணறுகளை கட்டாயம் முறைப்படி மூடவேண்டும் என்றும், அரசு உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நிலத்தடி நீர் அதிகார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், ஆழ்துளை கிணறுகள் குறித்து 8610540815, 9842558320,0413-204043 ஆகிய எண்கள் மூலம் தகவல் கூறலாம் என்றும், உரிமையாளர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in