சென்னை அருகே உள்ள பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை, பெருங்களத்தூரில் தாம்பரம்- வண்டலூர் ரயில் நிலையங்களுக்கிடையே ரூ.206.8 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ரயில்வே மேம்பால கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
Newstm.in