விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அரசு நிறைவேற்றாது: அமைச்சர் காமராஜ்

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 03:56 pm
government-will-not-implement-projects-affecting-farmers-minister-kamaraj

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அரசு ஒருபோதும் நிறைவேற்றாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், " ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அரசு ஒருபோதும் நிறைவேற்றாது என தெரிவித்தார். சுர்ஜித் மீட்பு பணியின்போது அறிவுரை கூறாத ஸ்டாலின், இறந்த பிறகு அரசை குறை கூறலாமா? என்றும், குழந்தை இறந்த பிறகு அரசை குறை கூறலாம் என காத்திருந்தாரா? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12.66 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளதாகவும், மழைக்காலங்களில் மண்ணென்ணெய் தேவை அதிகமானால் மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவோம் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close