அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 01:49 pm
chennai-meteorological-report

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2, 3 தினங்களில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு தென் மாவட்டங்களில் வெப்பசலனத்தின் காரணமாக  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை சூலூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை
காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதியிலும், நவ. 6,7, 8  ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அந்தபகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close