சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 10:43 pm
air-pollution-increase-in-chennai-weather-center

சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளதாகவும், அடுத்த 2  நாட்களுக்கு இந்த நிலை தொடர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவு 50 முதல் 60 மைக்ரோ கிராம் மட்டுமே. ஆனால், மணலியில் 337 மைக்ரோ கிராம் , வேளச்சேரியில் 321 மைக்ரோ கிராம், ஆலந்தூரில் 317  மைக்ரோ கிராம் அளவு பதிவாகியுள்ளது என்றது வானிலை மையம்.

மேலும், ‘கிழக்கத்திய காற்று முற்றிலும் தடைபடுவதால் காற்று சென்னையில் அதிகரித்துள்ளது. வடக்கே நிலவும் காற்று மாசு கிழக்கு இந்திய பகுதிகள் வழியாக கீழ்நோக்கி தமிழகத்தில் நுழைகிறது. கிழக்கத்திய காற்று வலுப்பெற்று வீசினால் இதுபோன்ற நிலை இருக்காது’ என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close