பெரிய வெங்காயம் விலை சற்று குறைந்தது!

  அனிதா   | Last Modified : 05 Nov, 2019 08:57 am
big-onion-price-is-slightly-low

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம் அதிகளவு வந்துள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. வெங்காய விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக வெங்காயம் இருப்பு வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.70க்கு விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் ரூ. 66 ஆக குறைந்துள்ளது. இதேபோல், திருச்சி பால்பண்ணை அருகே உள்ள மண்டிக்கு கர்நாடகாவில் இருந்து 10 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்து இறங்கியுள்ளது. அங்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 20 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close