வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  அனிதா   | Last Modified : 05 Nov, 2019 01:23 pm
storm-create-in-the-bay-of-bengal-tomorrow-meteorological-survey

 தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று அந்தமான் கடற்பகுதியி ல் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்டல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.   இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.  நாளை ( நவ.6 ஆம் தேதி) இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்கக்  கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகப ட்சமாக   மண்டபத்தில் 4 செ .மீ மழை பதிவாகியுள்ளது.  அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை 
மீனவர்கள் நவ.5 ஆம் தேதி அந்தமான், மத்திய கி ழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும்,   நவ.  6,7, 8 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதி வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த ப்படுகிறார்கள்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close