முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததாலேயே சுர்ஜித் பலி: அமைச்சர்

  அனிதா   | Last Modified : 06 Nov, 2019 11:02 am
surjith-death-due-to-lack-of-precautions-minister

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் குழந்தை சுர்ஜித் உயிரிழந்தார் என அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் திருச்சி சுர்ஜித் விவகாரத்தில் பெற்றோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாததால் சுர்ஜித் தவறி விழுந்து உயிரிழந்தார் எனவும் குறிப்பிட்டார். மேலும், 8 ஆண்டுக்கு முன்பு தோண்டிய ஆழ்துளை கிணற்றை சிமெண்ட் பலகையால் மூடியிருந்தால் உயிரிழந்திருக்க மாட்டேன் என சுர்ஜித் கூறுவது போல உள்ளதாக கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close