தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது!

  அனிதா   | Last Modified : 07 Nov, 2019 01:23 pm
tamil-nadu-cabinet-meeting-started

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது. 

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் சுமார் 8 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்றார். இந்நிலையில், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்கும் ஒப்பந்தங்களுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி  உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close