மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு!

  அனிதா   | Last Modified : 07 Nov, 2019 03:34 pm
order-to-close-liquor-shops

கோவை மாவட்டத்தில் மிலாதுன் நபி தினத்தன்று  மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல், எஃப்.எல்.3ஏ மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகிய உரிமத்தலங்களின் மதுக்கூடங்களை மிலாதுன்‌ நபி தினத்தையொட்டி வரும் 10ம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close