ஜேப்பியார் குழுமத்தில் 2வது நாளாக தொடரும் ஐ.டி.ரெய்டு!

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 08:53 am
it-raid-continues-for-the-2nd-day-in-the-jeppiaar-group

ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் பிரபலமான ஜேப்பியார் கல்விகுழுமம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜேப்பியார் கல்விகுழும அதிகாரிகள், உறவினர்களின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close