மிசா சட்டத்தில் கைதானாரா? 2 நாளில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கப்படும்- அமைச்சர்

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 09:47 am
is-stalin-misa-arrested-in-law

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானாரா? இல்லையா? என 2 நாட்களில் ஆதாரங்களுடன் அவருக்கு பதிலளிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

ஷா கமிஷன் அறிக்கையில், ஸ்டாலின் பெயர் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா என அதிமுக கேள்வி எழுப்பவில்லை என்றும், மிசாவில் ஸ்டாலின் கைதானது பற்றி தனக்கு தெரியாது என பொன்முடிகூறியதால் தான் பிரச்சனையே எனவும் தெரிவித்தார். மேலும், எதற்கு கைதானேன் என்பதை ஸ்டாலின் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்காலாமே? என கூறிய அமைச்சர் மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என 2 நாளில் ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது குறித்த காரண குறிப்பு ஏதுவும் இல்லை எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close