மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 10:55 am
chief-minister-launched-of-meenakshi-amman-temple-lattu-plan

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

மதுரையில் உள்ள மிகப்பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. தமிழகத்தில் முதன்முறையாக இக்கோவிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இந்த இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 30கிராம் எடை கொண்ட லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியைபோல் மீனாட்சியம்மன் கோயிலிலும் காலை முதல் இரவு வரை தினமும் லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close