என் மீது காவி சாயம் பூச முயற்சி: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 12:33 pm
rajinikanth-speech-about-bjp-against

திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாகவும், காவி சாயத்திற்கு திருவள்ளுவரும், நானும் மாட்ட மாட்டோம் என்றும் தப்பித்து விடுவோம் எனவும் தெரிவித்தார். மேலும்,உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என குறிப்பிட்டார். பாஜகவில் சேருவதற்கு எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்றும், பொன்.ராதாகிருஷ்ணனிடம் பாஜகவில் இணைவது குறித்து நான் பேசவில்லை என்றும், என்னை பாஜக உறுப்பினராக காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார். பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்த அவர், பேச வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் போது அதைவிட்டு விட்டு இவ்விவகாரத்தை இவ்வளவு பெரிய சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது என குறிப்பிட்டார். மேலும் வள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை இருந்தவர் என்றார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close