வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 01:09 pm
chief-minister-orders-open-water-from-vaigai-dam

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

வைகை அணையில் இருந்து விவசாயத்திற்காக பூர்வீக பாசனப்பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பழனிசாமி நாளை முதல் டிச.2ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். வைகை பூர்வீக பாசனப் பகுதி  3ஆம் பாகத்திற்கு நாளை முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு 1441 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடவும், வைகை பூர்வீக பாசனப்பகுதி 2ஆம் பாகத்திற்கு நவ.17 முதல் 21 வரை 386 மில்லியன் கன அடி நீர் திறக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பகுதி ஒன்றை சேர்ந்த 4 கண்மாய்களுக்கு நவ.22 முதல் 25 வரை 48 மில்லியன் கன அடி நீரும், விரகணூர் மதகணையில் இருந்து வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ஆம் பாகத்திற்கு நவ.26 முதல் டிச.2 வரை தண்ணீர் திறக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும்.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close