தமிழகத்தில் பாஜகவினால் காவி சாயம் பூச முடியாது - கார்த்தி சிதம்பரம்!!

  அபிநயா   | Last Modified : 08 Nov, 2019 07:07 pm
bjp-cannot-impose-saffron-in-tamilnadu-karthi-chidambaram

"காவி சாயத்தில் நான் மாட்ட மாட்டேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்ததை தொடர்ந்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் பாஜகவினால் காவி சாயம் பூச முடியாது என்பதை தான் இதன் மூலம் ரஜினி தெளிப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், " திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது, ஆனால் இவர்களின் காவி சாயத்திற்கு திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன், எப்படியும் தப்பித்து விடுவோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த கருத்து குறித்து கூறிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பாரதிய ஜனதா கட்சியின் காவி சாயத்தை தமிழகத்தில் ஒரு நாளும் பூச முடியாது என்பதை தான் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.

இதை தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனது தந்தைக்கு மிக விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close