உரம் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் துரைக்கண்ணு

  அனிதா   | Last Modified : 10 Nov, 2019 12:02 pm
no-shortage-of-fertilizer-minister

யூரியா உள்ளிட்ட உரங்கள் தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக கும்பகோணத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். 

சீனாவில் நடைபெற்ற சர்வதேச முப்படை வீரர்களுக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ராணுவ வீரர் ஆனந்தனை (ராணுவத்தில் ஒரு காலை இழந்தவர்) வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் கும்பகோணம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், "  மாற்றுத்திறனாளி ராணுவ வீரர் ஆனந்தன் தனது தடகள பயிற்சிக்கு தேவையான உதவிகளை கேட்டால் முதலமைச்சருடன் ஆலோசித்து தேவையான உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

டெல்டா பகுதிகளில் யூரியா உரம் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர்,  33 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தஞ்சை வந்துள்ளதாகவும், எனவே டெல்டா மாவட்டங்களில் யூரியா உள்ளிட்ட உரங்களின் தட்டுப்பாடு அறவே இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், வருங்காலத்திலும் விநியோகிக்கும் வகையில் யூரியா உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை விற்பதற்கு கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close