மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு !

  அனிதா   | Last Modified : 11 Nov, 2019 09:19 am
mettur-dam-water-levels-was-increased

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 14,784 கன அடிநீர் வந்துக்கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம்  119.610 அடியாகவும், நீர் இருப்பு 92.851 டி.எம்.சியாகவும் உள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close