வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆழியார் அணை (கோவை), சிவகிரியில் தலா 7 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
newstm.in