டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2019 06:56 pm
tnpsc-group-4-exam-results

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியானது.

www.tnpsc.gov.in, www.tnpscexam.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். 6,491 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 16,29,865  பேர் எழுதினார்கள். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் மிகக் குறைந்த நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியானது இதுவே முதல் முறையாகும். 

‘சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலம் மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். தேர்வு நடைபெற்ற நாளில் இருந்து வெறும் 72 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது’ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close