நெல்லை மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை முதல் 140 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கார் பருவ சாகுபடிக்கு நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர், அணையில் இருந்து 384.05 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.
மேலும், தண்ணீர் திறப்பின் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 2,756.62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
newstm.in