சிவசேனாவுக்கு பயந்தே மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி: கே.எஸ் அழகிரி

  அனிதா   | Last Modified : 13 Nov, 2019 09:53 am
president-s-rule-in-maharashtra-fearing-shiv-sena-ks-alagiri

மகாராஷ்டிராவில் சிவசனோ ஆட்சி அமைத்துவிடும் என்ற பயத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நானும் மு.க.ஸ்டாலினும் கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையார் மாதிரி பார்க்காமலே பேசிக்கொள்வோம் என்றும் , உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 17ஆம் தேதி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது தவறு என்றும் சிவசேனா ஆட்சி அமைத்துவிடும் என்ற பயத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். அயோத்தி தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும் என்றும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அயோத்தி தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close