பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

  அனிதா   | Last Modified : 13 Nov, 2019 01:43 pm
thirukkural-in-milk-packets-minister-rajendra-balaji

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு  வினியோகிக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

பாஜக ஐ.டி பிரிவின் மாநிலத் தலைவர் நிர்மல் குமார் என்பவர், திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு  வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் 
இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். கோரிக்கையை ஏற்று ட்விட்டரில் பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மிக விரைவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு  வினியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

 

— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019

 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close