தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு 

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 04:22 pm
ground-level-water-rise-in-tamil-nadu-3-meters

கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘கடந்த ஆண்டு தரைமட்டத்திலிருந்து 17.5 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் 1,286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் உள்பட அனைத்து அணைகளிலும் கடந்தாண்டை காட்டிலும் அதிக நீர்இருப்பு உள்ளது. நாள் ஒன்றுக்கு 1900 மில்லியன் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது’ என்றும் தகவல் கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close