திருவள்ளுவர் இருந்த போது இந்தியாவும் இல்லை, எந்த மதமும் இல்லை: சீமான்

  அனிதா   | Last Modified : 14 Nov, 2019 09:31 am
when-thiruvalluvar-was-there-was-no-india-no-religion-seeman

திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியாவும் இல்லை, இந்து என்ற மதமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  மறைந்த கட்சி தொண்டர்களின் திரு உருவ படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு, "சோமாலியா, எத்தியோபியா, வெனிசுலா  போன்று நம் நாடு போய் விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். மீத்தேன், ஷேல் கேஸ் என நம் நிலத்தின் மீது அதிமுக, திமுக ஆட்சி கையெழுத்திட்டு மண்ணையே சீர்குலைத்து விட்டார்கள்.

அதனால், திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை. இது எங்கள் கட்சி கொள்கை முடிவு நாங்கள் எப்போதும் தன்னிச்சையாகவே தேர்தல் களத்தில் விளையாடுவோம். காங்கிரஸ் இனத்தின் எதிரி, பாஜக மனித குலத்தின் எதிரி எந்த காலத்திலும் இரண்டு கட்சியுடன் உடன்பாடு வைத்துகொள்ள மாட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் 117 ஆண்கள் 117 பெண்கள் போட்டியிடுவார்கள். ஜனவரி மாதத்தில் வேட்பாளரை அறிவிப்போம். எங்களுக்கு ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் போன்ற கட்சிகளின் ஆதரவு இருக்கிறது. திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியா என்ற நாடும் இல்லை. இந்து என்ற மதமும் இல்லை. நான் மீசை வைத்து பூணூல் போட்டா என்னை பிராமணர் என்று ஒத்துக் கொள்வார்களா? எங்கள் காலம் வரும்பொழுது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது" என தெரிவித்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close