வசதி படைத்த பிள்ளைகள் குடிகாரர்களாக மாறுகின்றனர்: அமைச்சர் பாஸ்கரன்

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2019 04:02 pm
rich-children-become-alcoholics-minister-baskaran

வசதி படைத்தவர்களின் வீட்டு பிள்ளைகள் படித்து பெரியவர்களானதும் குடிகாரர்களாக மாறி விடுவதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார். 

சிவகங்கையில் நடைபெற்ற விவசாய கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், " வசதி படைத்தவர்களின் வீட்டு பிள்ளைகள் படித்து பெரியவர்களானதும் குடிகாரர்களாக மாறி விடுவதாகவும், அதே நேரத்தில் படிக்காததால் உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளியூருக்கு வேலைக்கும் செல்லும் இளைஞர்கள் கடனாளியாவதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் சிறுவயதிலேயே குவாட்டர் குடிப்பதாகவும் ஒழுங்காக படிப்பதில்லை என்றும் கூறினார். மேலும், ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் பெண் பிள்ளைகள் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், "விஜயகாந்த் அரசியலுக்கு வந்து என்ன சாதித்தார்? எனவே, அரசியலுக்கு நடிகர்கள் வந்தால் ஒன்றும் சாதிக்க முடியாது என தெரிவித்தார். இது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர்களை பற்றி பொதுவாகத் தான் கூறினேன், தவறாக எதுவும் கூறவில்லை என அமைச்சர் பாஸ்கரன் பின்பு விளக்கம் அளித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close