சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அகழாய்வுக்கான பட்டய வகுப்பு தொடங்கப்படவுள்ளது.
2020-21ஆம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்பு ஜனவரி மாதம் திங்கள் முதல் தொடங்கப்படுகிறது. வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்ள பயிற்சி அளிக்கப்படும். இந்த பட்டய படிப்பு சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் ஓராண்டு காலம் நடைபெறும்.
பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தினை www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in