அரசு பள்ளி மாணவர்களின் உடல்நலனை காப்பதற்காக தண்ணீர் அருந்துவதற்கு நேரம் ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், டெங்கு போன்ற நோய்களில் இருந்து அரசு பள்ளி மாணவர்களின் உடல்நலனை காக்க ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் அனுமதியளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 3 ஆண்டு விலக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Newstm.in