உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 15 Nov, 2019 10:44 am
local-elections-elections-commissioner-advises-district-collectors

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலேசானை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநர் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசித்து வருகிறார். இதில், 4 மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்றைய தினம் தூத்துக்குடியில், தேர்தல் முன்னேற்பாடு குறித்து தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தியிருந்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close