வதந்திகள் பரப்ப வேண்டாம்: சென்னை ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 02:50 pm
do-not-spread-rumors-chennai-iit-management-request

சென்னை ஐஐடி நிர்வாகம் தொடர்பாக வதந்திகள், அவதூறுகளை பரப்ப வேண்டாம் என்று ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ மாணவி பாத்திமாவின் தற்கொலை வேதனை தருகிறது; மாணவியின் மரணம் துரதிருஷ்டவசமானது. மாணவி உயிரிழப்பு தொடர்பான தகவல் கிடைத்தவுடன் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணைக்கு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தருகிறது. விசாரணை முடியும் வரை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனம் மீது அவப்பெயர் ஏற்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்களின் மன, உடல்நலனை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close