மூச்சு பேச்சு இல்லாத திமுக: அமைச்சர் செல்லூ ராஜூ

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 04:00 pm
minister-sellur-raju-criticism-about-dmk

போட்டி போட்டு கொண்டு பேட்டி கொடுத்த திமுக இப்போது மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ  விமர்சித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  பாத்திமா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுப்பார் என்று கூறினார். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட அனுமதி அளித்த தீர்ப்பின் முழுவிபரம் வந்த பிறகு முதலமைச்சர் பழனிசாமி அது குறித்து பேசுவார் என்றும், அதிமுக ஆட்சியில் தான் நதிநீர்ப் பிரச்சனையை சரிசெய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.  மேலும், உள்ளாட்சி தேர்தலுக்காக முதலில் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்து வந்த எதிர்க்கட்சியான திமுக இப்போது பேச்சு மூச்சில்லாமல் இ ருப்பதாகவும்     உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு என்ன நோக்கம் இருக்கிறது என்பது தெரியவில்லை எனவும் கூறினார். 

Newstm.in 

 

  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close