8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 02:53 pm
heavy-rainfall-in-8-districts-weather-center

நெல்லை, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், நெல்லை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வழக்கமான அளவை விட 40 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேரன்மா தேவி, குலசேகரப்பட்டினம், பாளையங்கோட்டையில் தலா 10.செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close