ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 03:21 pm
minister-sengottaiyan-speech-in-erode

2020 ஜனவரி மாத இறுதிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்ட கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " கிராமப்புறங்களில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்றும் வரும் ஜனவரி இறுதிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி மக்கள் நலத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

கீழ்பவானி பிரதான கால்வாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும், கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை பராமரிக்க தமிழக அரசு விரைவில் நிதி ஒதுக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close