தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

  அனிதா   | Last Modified : 18 Nov, 2019 08:35 am
6-new-medical-colleges-in-tamil-nadu-minister-vijayabaskar

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 3 புதிய மருத்துக்கல்லூரிக்கான திட்ட முன்வடிவம் இன்று திட்ட கமிட்டியிடம் அளிக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், " தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அனுமதி முதலமைச்சர் பழனிசாமி பெற்றுதந்துள்ளதாகவும், அதற்கான கட்டமைப்புக்கு தலா 100 கோடி வீதம் 600 கோடி நிதியினையும் பெற்றுதந்து நல்வாழ்வுத்துறைக்கு வராலாற்று புரட்சியினை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளுர் மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான திட்டமுன்வடிவங்களை நாளை (நவ.18) திட்ட கமிட்டியிடம் தமிழக செயலாளர் அளிக்க உள்ளதாகவும், தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு இது அத்தாட்சி எனவும் கூறினார். 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close