முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை: அமைச்சர்  

  அனிதா   | Last Modified : 19 Nov, 2019 11:02 am
private-hospital-treatment-in-government-insurance-scheme-minister

அங்கீகரிக்கப்பட்ட 870 தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை பெறலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பழிவாங்கும் நடவடிக்கையாக மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்யப்படவில்லை என்றும், பணியிட மாறுதல் நிர்வாக ரீதியானது என்றும் தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றும் என்றும்  முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 870 தனியார் மருத்துவமனைகளிலும் பயனாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close