சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு; பழைய சொத்து வரியை செலுத்தினால் போதும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 04:33 pm
suspension-of-property-promotion-old-property-tax-payable-minister-spvelumani

உள்ளாட்சிகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘சொத்துவரி குறைக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை. உள்ளாட்சிகளில் சொத்துவரி உயர்வை குறைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும்வரை பழைய சொத்துவரியே வசூலிக்கப்படும். மறுபரிசீலனை செய்யும்வரை 2018 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை செலுத்தினால் போதும். கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்து வரி அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும்’ என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close