சபரிமலை சிறப்பு ரயில்கள் இயக்கம்!

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 10:17 am
special-trains-for-sabarimala

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சபரிமலை மண்டல சீசன் தொடங்கியுள்ளதையொட்டி ஐயப்பப் பக்தர்கள் பலர் சபரிமலைக்கு செல்வதற்காக விரதம் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொல்லத்திற்கு ஜன.3,17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்றும், கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையே டிச.22, ஜன.12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close